;
Athirady Tamil News

வெலிமடையில் முப்படையினர் குவிப்பு; உச்ச அளவில் பாதுகாப்பு…!! (படங்கள்)

0

நுவரெலியா வெலிமடை நகருக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு மேலதிகமாக வெலிமடை நகருக்கான பாதுகாப்பில் விசேட அதிரடிப் படையினரும், இராணுவத்தினரும் களமிறங்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

வெலிமடை பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட சிறிய சலசலப்பை அடுத்து இரவோடிரவாக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

எனினும் தொடர்ந்தும் அமைதியை பாதுகாக்கும் வகையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 17 =

*