;
Athirady Tamil News

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி…!!

0

கொஹூவல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த விபத்தில் இரண்டு பேர் காயமடைந்து களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் வாகனம் ஒன்றும், முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மோட்டார் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 − 20 =

*