;
Athirady Tamil News

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் குழுவினர் – சபாநாயகர் சந்திப்பு…!! (படங்கள்)

0

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவரும் அங்கத்தவர்களும் பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்துள்ளனர்.

இலங்கையில் நாகரீகம் மிக்க சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் முக்கியமான பொறுப்பும் கடமையும் உள்ளதென்று இச்சந்திப்பின் போது சபாநாயகர் தெரிவித்தார்.

பலர் தமது உற்றார் உறவினர்களை இழந்துவாடுகின்றார்கள். காணாமல் போனவர்கள் பற்றிய உண்மையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

இவர்களுக்காக உண்மையைக் கண்டறியும் பொறுப்பை அலுவலகம் சரிவர நிறைவேற்ற வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்.

மனித உணர்வுகளுக்கு மதிப்பளித்து சமூகத்தில் சகலரும் அச்சமும் சந்தேகமும் இன்றி வாழும் உரிமையை உறுதி செய்வது அவசியம்.

அத்துடன் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டும் முயற்சிகளிலும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒத்துழைப்பு வழங்க முடியும் என சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − five =

*