;
Athirady Tamil News

சுற்றுலாப்பயணிகள் , தோட்டத்தொழிலாளர்கள் பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம்…!!

0

கண்டி பிரதேசத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு பிரச்சனை இருக்குமாயின் அது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை இத்தோட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் தமது மாதாந்த சம்பளத்திற்கு பின்னர் தமது தேவைகளுக்காக நகரங்களுக்கு வருவோர் தொடர்பிலான பாதுகாப்பு குறித்தும் பொலிஸார் கவனம் செலுத்துவார்கள் என்றும் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர், செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டினார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கபில வைத்தியரத்ன ,மேலதிக சொலிஸ்ரர் ஜென்ரல் ஜசந்த கோத்தாகொட உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*