இன்ஸ்பெக்டர் தாக்கி கர்ப்பிணி பலி- மதுரை ஐகோர்ட்டு விசாரிக்க கோரிக்கை..!! (வீடியோ)

திருச்சி, திருவெறும்பூரில் வாகன சோதனையின்போது போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தாக்கியதில் கர்ப்பிணி பெண் உஷா பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் வழக்குகளை விசாரித்து வந்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பாத்திமா என்பவர் திருச்சியில் போலீசார் தாக்கியதில் கர்ப்பிணி பெண் இறந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யுமாறு பாத்திமாவுக்கு உத்தரவிட்டனர்.