;
Athirady Tamil News

இன வன்முறைகளுக்குப் பின்னால் கோட்டாபயவின் விசுவாசிகள்…!!

0

நாட்டில் மீண்டும் தீவிரமடைந்துள்ள இன வன்முறைகளுக்குப் பின்னால் கோட்டாபய ராஜபக்சவை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் இருப்பதாக இனவாதத்திற்கு எதிராக பல தசாப்தகாலமாக போராடிவரும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதேவேளை முஸ்லீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இன வன்முறைகளைத் தடுக்காதது குறித்து மைத்திரி – ரணில் தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கத்தையும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கடுமையாக சாடியிருக்கின்றார்.

நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து எதிர்வரும் தேர்தல்களிலும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக தாமரை மொட்டுக் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் முஸ்லீம்கள் மீதான இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்று ஏற்கனவே தான் அரசாங்கத்தை எச்சரித்திருந்ததாகவும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்த இன வன்முறைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவை அவர்களுக்கு இருப்பதாகவும் கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் விக்கிரமபாகு கருணாரத்ன, குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களை விட முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் மிக நெருங்கிய உறவைப் பேணி வரும் நிலையில் அந்த இரண்டு இனங்களுக்கிடையிலும் பிளவை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் ஊடாக தமக்கு சாதகமான அரசியலை முன்நகர்த்தி செல்ல முடியும் என்று மஹிந்த விசுவாசிகள் நம்புவதாகவும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனாலேயே சிங்களவர்களின் ஆதிக்கம் நிறைந்த பிரதேசங்களில் ஒன்றான கண்டியில் முஸ்லீம்களுக்கு எதிரான இன வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ள விக்கிரமபாகு இந்த இன வன்முறைகளை ஜனாதிபதி தேர்தலை சிங்கள இனவாத அரசியலை மையப்படுத்தியதாக மாற்றிக்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த பாரிய சதித் திட்டங்களை முறியடிக்க மைத்திரி – ரணில் அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவில்லை என்றும் குற்றம்சாட்டும் கலாநிதி விக்கிரமபாகு அம்பாறையில் இன வன்முறைகள் வெடித்த போதே அதனை தடுத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தில் சிங்களவர்கள் அற்ற ஒரு படையணியேனும் இல்லாததையும் சுட்டிக்காட்டியுள்ள நவ சம சமாஜக் கட்சியின் தலைவர், இன வன்முறைகளின் போது தனிச் சிங்களவர்களைக் கொண்ட இராணுவத்தையே அல்லது பொலிசாரையோ கொண்டு வன்முறைகளைத் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனால் சிங்கள பேரினவாதமோ அல்லது சிங்கள தனித்துவ அடையாளமோ அற்ற படையணியொன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − three =

*