;
Athirady Tamil News

கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்- மனிதாபிமான அடிப்படையில் இந்திய கைதிகளை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்..!!

0

இந்தியா-பாகிஸ்தான் இடையே கைதிகளை பரிமாற்றம் செய்வது தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, மனிதாபிமான அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் தற்போது, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகளில் மனிதாபிமான அடிப்படையில் பெண்கள், 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற அடிப்படையில் இந்தியா சார்பில் பாகிஸ்தானிடம் கோரிக்கை விடப்பட்டது.

மனிதாபிமான அடிப்படையிலான இந்த கைதிகள் பரிமாற்றத்தை ஏற்றுக்கொண்டதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். மேலும் குழந்தைகளும், 60 வயதிற்கு அதிகமானவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள். இரு நாடுகளைச் சேர்ந்த கைதிகளும் விடுதலை செய்யப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல் இந்தியாவும் பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பாகிஸ்தான் – இந்தியா எல்லையில் நிலவும் அசாதாரண நிலையை சீராக்குவதற்கு முயன்று வருவதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் ஆசிப் கூறினார்.

இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்ட அளிக்கையில், ‘பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தனிப்பட்ட கவனம் தேவைப்படுவர்கள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அந்தந்த நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகே விடுதலை செய்யப்படுவர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + eighteen =

*