;
Athirady Tamil News

பறக்கும் விமானத்தில் ரகளை: அவசரமாக தரையிறக்கிய விமானி..!!

0

ஓமானில் இருந்து எகிப்து செல்லும் விமானத்தில் பயணி ஒருவர் திடீரென்று பணிப்பெண்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டதால் விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.ஓமான் தலைநகர் மஸ்கெட்டில் இருந்து எகிப்தின் கெய்ரோவுக்கு குறித்த விமானம் புறப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட 25 வது நிமிடத்தில் பயணி ஒருவர் விமான ஊழியர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

விமானத்தில் பயணிகள் இருவர் விவாதத்தில் ஈடுபடவும், அது மோதலாக மாறி விமான ஊழியர்கள் மீது தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு மாறியுள்ளதாக, உள்ளூர் செய்தி நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

குறித்த சம்பவம் எல்லை மீறி செல்ல வாய்ப்புள்ளதாக எழுந்த அச்சத்தை அடுத்து, விமானி மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே விமானத்தை திருப்பி விட்டுள்ளார்.

இதனிடையே ரகளையில் ஈடுபட்ட எகிப்திய பயணியை உடனடியாக விமான நிலைய பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, விமான ஊழியர்கள் மற்றும் 78 பயணிகளிடமும் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் எகிப்திய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் மேற்கொண்டுள்ள 66 பயணிகளும் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் விமானி தனது மொபைல் போனை பயன்படுத்தியதால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*