;
Athirady Tamil News

வவுனியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்..!! (படங்கள்)

0

சர்வதேச மகளிர் தினமான இன்று (8) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில்கவனயீர்ப்பு போராட்டம்! ஒன்றில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி கண்டறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் பிள்ளைகளை காணாது வீதியில் ஒரு வருடத்திற்கு மேலாக போராட்டத்தில்

ஈடுபட்டு வரும் நிலையில் மகளிர் தினத்தினை அனுஸ்டிக்க முடியுமா என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமது பிள்ளைகள் கணவன்மார் மற்று ம் உறவினர்கள் கிடைக்க வேண்டும் வவுனியாவில் இன்று 378 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா பிரதான தபாலகத்திற்கு முன்பாக சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட:டு வரும் இடத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பிள்ளைகளை தொலைத்துவிட்டு வீதியோராத்தில் போராட்டத்தில் ஈடுபடுகையில் எவ்வாறு மகளிர் தினத்தினை கொண்டாடுவது.
எமது பிள்ளைகள் எமக்கு கிடைக்க வேண்டும் சர்வதேசம் தலையிட்டு தீர்வினை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 6 =

*