;
Athirady Tamil News

இரத்தினபுரி – மல்லவ பிரதேசத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கல், ஒருவர் உயிரிழப்பு…!!

0

இரத்தினபுரி – மல்லவ பிரதேசத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு நிலையில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்றிரவ இடம்பெற்றதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் 43 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடுபம் தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

உயிரிழந்த நபர் தினமும் குடிபோதையில் வந்து தனது தந்தையை துன்புறுத்துவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவும் இதுபோன்ற ஒரு சம்பவம் வீட்டில் இடம்பெற்ற போது உயிரிழந்த நபருக்கும், அவரது மூத்த சகோதரருக்கும் இடையே வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மூத்த சகோதரர் கூரிய ஆயுததத்தினால் தாக்கியதை தொடர்ந்து சம்பவ குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*