;
Athirady Tamil News

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மது போதையில் தாக்குதல்…!! (வீடியோ)

0

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மது போதையில் தாக்குதல் இந்திய எல்லையில் மீன்பிடிக்க கூட அச்சம் என பாதிக்கப்பட்ட மீனவர்களின் வேதனை.

இந்திய எல்லையில் இலங்கை கடற்படையினர் மது போதையில் கற்கள், போத்தல்களைக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்த சம்பவத்தால் பெருத்த நஷ்டத்துடன் கரை திரும்பிய மீனவர்கள்

புதன்கிழமை காலை 420 இற்கும் குறைவான படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் இரண்டாயிரத்திக்கு மேற்ப்பட்டோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடிக்க முயன்றபோது இந்திய எல்லைப்பகுதியில் ஆறுக்கும் மேற்ப்பட்ட இலங்கை கடற்படைக்கு சொந்தமான அதி விரைவு ரோந்துக்கப்பல்களில் மது போதையில் வந்த இலங்கை கடற்படையினர் சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீது போத்தல்கள், கற்கள், தடிகள், மற்றும் இரும்பு கம்பிகளை மீனவர்கள் மீது சரமாரியாக வீசி எரிந்து அச்சுறுத்தியுள்ளனர்.

இதனால் நள்ளிரவில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மீனவர்கள நடுக்கடலில் படகுகளை நிறுத்தி கைது நடவடிக்கைளுக்கு அஞ்சி படகுகளிலிருந்த விளக்குகளை அணைத்துவிட்டு காத்திருந்தனர்.

இதனையடுத்து இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்துக்கப்பல்களிலிலுள்ள ராட்சத மின்விளாக்கால் மீண்டும் மீனவர்களை விரட்டியுள்ளனர் மேலும் இருநூற்றுக்கும்; மேற்ப்பட்ட படகுகளிலிருந்த வலைகளை வெட்டியதோடு இனி மின்பிடிக்க வரக்கூடாது என மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சர்வ தேச கடல் எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக சம்பவ பகுதிக்கு வந்த இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படையிடம் பேசி கடலில் வெட்டி வீசப்பட்ட இராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் மீன் பிடி வலைகளை கடலில் இருந்து எடுத்து மீனவர்களிடம் ஒப்படைத்தாக பாதிக்கப்பட்டு கரை திரும்பிய மீனவர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்ப்படையினரின் இந்த அத்துமீறலால் படகுகளுக்கு தலா ரூ30 ஆயிரம் முதல் ரூ 60 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவத்துள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் மீனவர் பிரச்சினையில் கவனம் செலுத்தி இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் நடு கடலில் பிரச்சினைகள் இல்லாமல் மீன்பிடிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்பிடி தொழிலே இல்லாமல் மீனவர்கள வறுமையால் அழிந்து போவார்கள் என வேதனை தெரிவித்துள்ளனர்.

பேட்டி

நாகராஜன் – இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்

ராகவ் – இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × five =

*