;
Athirady Tamil News

தீர்வினை வழங்காவிடின் நாளையும் தொடரும்… அரசாங்கத்திற்கு எச்சரிக்கை…!!

0

வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர்களின் பணிபுறக்கணிப்பு நடவடிக்கை நாளைய தினமும் தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

அந்த சங்கம் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களின் விசேட பிரிவில் காணப்படும் வெற்றிடங்களுக்கு புதிய நியமனங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று முற்பகல் முதல் வடமேல் மாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த கோரிக்கைக்கு அரசாங்கம் தீர்வொன்றினை முன்வைக்காத பட்சத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பொது சுகாதார பரிசோகர்களின் அனைத்து பிரிவு ஊழியர்களையும் ஒன்றிணைத்து நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 2 =

*