;
Athirady Tamil News

ஏறாவூர் பகுதியில் மின்மாற்றி கம்பத்தில் மோதி விபத்தில் ஒருவர் பலி…!!

0

ஏறாவூர் பகுதியில் மின்மாற்றி கம்பத்துடன் மோதுண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஹாஜிரீன் கிராமத்தைச் சேர்ந்த ஐயூப்கான் அம்ஸாத் அலி (வயது 25) எனும் இளைஞன், மின்மாற்றிக் கம்பத்தில் மோதுண்டு, இன்று (08) உயிரிழந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, நேற்றுப் புதன்கிழமை நள்ளிரவு வேளையில், மோட்டார் சைக்கிளில் இவர் தனியாக முஹாஜிரீன் கிராமத்திலிருந்து பயணித்துக் கொண்டிருக்கும்போது, இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதி மருங்கிலிருந்த மின்மாற்றிக் கம்பத்துடன் மோதியுள்ளது.

காயமடைந்த இவர், உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பயனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × two =

*