;
Athirady Tamil News

இலஞ்சத்தை இல்லாதொழிக்க ஊடக முக்கியஸ்தர்கள் சந்திப்பு…!!

0

இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்காக தேசிய செயற்திட்டம் ஒன்று வகுக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக ஊடக நிறுவன முக்கியஸ்தர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வொன்று இன்று நிதி மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு ஊடக அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதேவேளை, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர்களான ரமணி குணவர்த்தன, திலக ஜயசுந்தர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 1 =

*