;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் தொழிற்றுறை வணிக மன்றத்தின் மகளிர் அலகு அங்குரார்ப்பணம்..!! (படங்கள்)

0

தொழில் முயற்சியாண்மையில் பெண்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையிலும், பெண் தொழில் முயற்சியாளகளுக்குத் தேவையான வணிக வாய்ப்புகள், வலையமைப்பை ஏற்படுத்தும் வகையிலும் யாழ்ப்பாணம் தொழிற்றுறை வணிக மன்றத்தின் மகளிர் அலகு அங்குரார்ப்பண நிகழ்வு சர்வதேச மகளிர் தினமான இன்று(08-03-2018) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தொழிற்றுறை வணிக மன்றத்தின் தலைவர் கை.விக்னேஸ் தலைமையில் யாழ்ப்பாணம் ஹற்றன் நஷனல் வங்கி மெற்றோ கிளை மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் தொழிற்றுறை வணிக மன்ற உறுப்பினர்கள், வங்கியாளர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

சுயதொழில், தொழில் முயற்சியாண்மையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டிரூந்தனர்.

இவர்கள் அனைவரையும் ஸ்தாபக அங்கத்தவர்களாகக் கொண்டியங்கும் வகையில் யாழ்ப்பாணம் தொழிற்றுறை வணிக மன்றத்தின் மகளிர் அலகு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*