;
Athirady Tamil News

சர்வதேச சிறுநீரக தினம் இன்று…!!

0

சர்வதேச சிறுநீரக தினம் இன்றாகும். இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இலங்கையில் ஆகக்கூடுதலாக தொற்றா நோயான சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வட மத்திய மாகாணத்திலேயே காணப்படுவதாக இதன்போது குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் வருடமொன்றுக்கு சுமார் 5000 சிறுநீரக நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வருகின்றது.

மாளிகாவத்தையிலுள்ள தேசிய சிறுநீரக மத்திய நிலையத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றது.

அத்தோடு சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான காரணம் கண்டறியப்படுவதாக அதன் பணிப்பாளர் ரத்ன சிறிஹெவகே தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*