;
Athirady Tamil News

பெண் குழந்தைகள் பாரமில்லை அவர்கள் எங்கும் சாதிக்கிறார்கள் – பிரதமர் மோடி..!!

0

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜூனூ என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஆண்களுக்கு இணையாக பெண்களும் உரிமைகளை பெற்ற சமூகத்தின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று தெரிவித்தார். வீட்டில் கழிவறை கட்டுவதற்காக ஆடுகளை விற்ற சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூதாட்டி குன்வர் பாயை நினைவு கொள்வதாகவும், தூய்மை இந்தியா திட்டத்திற்காக அவரது தியாகம் மறக்க முடியாத ஒன்று என்றும் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள மாமியார்கள் எல்லாம் பெண் குழந்தைகள்தான் வேண்டும் என்று கூறிவிட்டால் அது சமூகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பெண் குழந்தைகளை பாரமாக கருதாதீர்கள் நாட்டுக்கு அவர்கள் பெருமையை தேடித்தருவதை சுற்றிப்பாருங்கள். எல்லா துறையிலும் அவர்கள் கோலோச்சி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + four =

*