;
Athirady Tamil News

மத்திய அமைச்சர்கள் இருவர் பிரதமர் மோடியிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தனர்..!!

0

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் ஆந்திர அரசுக்கும் மத்திய அரசுக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை தெலுங்கு தேசம் கட்சி எடுத்தது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது.

இதற்கிடையே, பிரதமர் மோடி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, கூட்டணியில் இருந்து விலகும் முடிவை ஏன் எடுக்கப்பட்டது என நாயுடு பிரதமரிடம் விளக்கியுள்ளார்.

இதனை அடுத்து, மத்திய அமைச்சராக உள்ள இரண்டு தெலுங்கு தேசம் எம்.பி.க்களான அசோக் கஜபதி ராஜு, ஒய் எஸ் சவுத்திரி ஆகிய இருவரும் இன்று பிரதமர் மோடியை சந்தித்து தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two − 1 =

*