வைபையை நிறுத்தியதற்காக பெண்ணை கடுமையாக தாக்கிய கணவர்..!!

ஐதராபாத்தின் சோமாஜிகுடா பகுதியை சேர்ந்தவர் சுல்தான். அவருக்கு ரேஷ்மா என்ற மனைவியும், மூன்று வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். ஏற்கனவே இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சுல்தான் இரவில் நெட் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் ரேஷ்மா வைபையை நிறுத்தி இருக்கிறார். அந்த கோபத்தில் ரேஷ்மாவை சுல்தான் கடுமையாக தாக்கி இருக்கிறார். இதனால் ரேஷ்மாவின் முகம், நெஞ்சு, கை என உடல் முழுக்க காயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து ரேஷ்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமான இருந்ததால் முதலில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ரேஷ்மாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கொலை முயற்சி, மனைவியை கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரேஷ்மாவின் கணவருக்கு மனநோய் இருக்கிறதா என்று மருத்துவமனையில் சோதனை செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.