;
Athirady Tamil News

வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகளை துரிதப்படுத்த திட்ட முகாமைத்துவ பிரிவு…!!

0

ரயில் குறுக்கு பாதையில் பாதுகாப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கும் மற்றும் வடக்கு ரயில் பாதையை புனரமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தும் திட்ட முகாமைத்துவ பிரிவுவொன்று அமைக்கப்படவுள்ளது.

இலங்கையின் ரயில் வீதி பாதை வலைப்பின்னலின் நீளம் 1450 கிலோமீற்றர்களாகும். அத்தோடு இதில் 1337 குறுக்கு ரயில் பாதை உண்டு. இவற்றில் 520 ரயில் குறுக்குபாதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் மேலும் 400 ரயில் குறுக்கு பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.மேலும் எஞ்சியுள்ள ரயில் குறுக்கு பாதைகளை உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கான திட்டம் ஹங்கேரிய அரசாங்கக்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் ரயில் பயணத்திற்கான நேரத்தை 40 நிமிடங்களாக குறைக்கும் வகையில் 150 கிலோமீற்றர் வேகத்தில் வடக்கு ரயில் பாதையில் ரயில் பயணிக்கக்கூடிய வகையில் மாஹோ சந்தியிலிருந்து ஓமந்தை வரையிலான ரயில் பாதை புனரமைக்கப்ட்டுள்ளது.

கொல்காவலையில் இருந்து குருநாகல் வரையில் இரண்டை ரயில் பாதையை அமைக்க சமிஞ்சை கட்டமைப்பபை பொருத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை துரிதமாக செயற்ப்படுத்த திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை அமைக்க ஹங்கேரியா நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியுதவின் கீழ் ரயில் குறுக்கு பாதை அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 2 =

*