;
Athirady Tamil News

மட்டக்களப்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு…!!

0

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தினால் எற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளிர் மன்ற மண்டபத்தில் அம்;மன்றத்தின் தலைவி திருமதி மனோகரி சீவரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.

சமய வழிபாடுகளின் பின் ஆரம்பமான இந்;நிகழ்வில் மகளிர் மன்ற கீதம் ஆசியுரை வரவேற்பு நடனம் நாடகம் சேவைநலன் பாரட்டு மகளிர் தின உரை என்பன இங்கு இடம்பெற்றன.

அதிதிகளால் சமுகத்திற்க்கு சேவையாற்றிய பெண்களும் பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் இங்கு கொளரவிக்கப்பட்டனர். மற்றும் மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் நிதியுதவின் கீழ் இயங்கும் பெண் சுயதொழில் முயற்சியாளர்களின் கண்காட்சியும் இங்கு நடைபெற்றது.

இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலக சிரேஸ்ட உதவி செயலாளர் வெ.தவராஜா மற்றும் கிழக்கு பல்கலைகழக வேந்தர் வைத்தியகலாநிதி வே.விவேகானந்தராஜா கலந்து கொண்டனர்.

சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலைகழக கலை கலாசாரபீடத்தின் தலைவர் கலாநிதி திருமதி. சாந்திகேசவன் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள வைத்திய அதிகாரி திருமதி சாருமதி ரவிசந்திரன் மற்றும் ஆன்மிக அதிதியாக மட்டக்களப்பு இராமகிருஸ்னமிசனின் தலைவர் சுவாமி பிரபு பிறேமானந்தா மகராஜ் மற்றும் மட்டக்களப்பு இந்து மகளிர் மன்றத்தின் பிரதிநிதிகள் பொது மக்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 4 =

*