;
Athirady Tamil News

வவுனியா மதீனாநகரில் பொதுமக்களுடன் பொலிஸார் கலந்துரையாடல்…!! (படங்கள்)

0

????????????????????????????????????
வவுனியா மதீனாநகரில் பொதுமக்களுடன் பொலிஸார் நேற்று மாலை (08) கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர்.

மதீனாநகர் பள்ளிவாசலுக்கு முன்னால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரயர் எரிக்கப்பட்ட சம்பவத்தினால் ஒரு பதட்டமான நிலையேற்பட்டது. இதனையடுத்து குறித்த பகுதியில் இராணுவம், பொலிஸார் பாதுகாப்பில் இடுபட்டிருந்தனர்.

தொடர்ந்தும் அப்பகுதியில் விசமிகளால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறமல் இருப்பதற்கான முனைப்புக்களில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் ஒரு கட்டமாக இன்று மதினாநகர் பள்ளிவாசலில் வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியேட்சகர் பியசிறி பெனாண்டோ தலமையில் சென்ற பொலிஸ் குழுவினருக்கும் அக்கிராமத்தை சேர்ந்த முஸ்லீம் மக்களிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் கருத்து தெரிவித்த மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நாட்டில் நடைபெறும்.

சிறு சிறு வன்முறைகள் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்படும் அவசரகாலச் சட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் கண்டி பிரதேசத்திற்கு பயணம் செய்ப வேண்டாம் பாதுகாப்பு தரப்பினர் கண்டி பிரதேசத்திற்குள் நுழைபவர்களை கடும் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகிப்பவர்களை கைது செய்து வரகின்றனர் என குறிப்பிட்டதுடன் மதினா நகர் பள்ளிவாசல் முன்பாக ரயர் எரிப்பில் ஈடுபட்டவர்கள் அவசரகாலச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..

????????????????????????????????????
You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − twelve =

*