;
Athirady Tamil News

தொற்றா நோய்களிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்…!!

0

பாடசாலை மாணவ, மாணவிகளை தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்கும் கூட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை கல்வியமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து முன்னெடுக்கின்றன.

இந்த திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல் கல்வியமைச்சில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள் அகிலவிராஜ் காரியவசம், டொக்டர் ராஜித சேனாரட்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்கள் புகைத்தலுக்கும் மதுபானத்திற்கும் அடிமையாவதை தடுப்பது பற்றி விரிவாக ஆராயப்பட்டது. சுகாதார மற்றும் உடற்கல்வி விடயங்களை உயர்தர வகுப்புக்கான பாடத்திட்டங்களிலும் இணைப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*