;
Athirady Tamil News

யாழில் பூட்டப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள்…!!

0

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாண நகரத்திலுள்ள முஸ்லிம் வர்த்தகர்களின் கடைகள் பூட்டப்பட்டுள்ளதாக எமது கள நிலைச் செய்தியாளர் குறிப்பிட்டார்.

கண்டி மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமுகமாக இதனை ஒரு கடையடைப்பு நடவடிக்கையாகவே அவர்கள் மேற்கொள்வதாக ஐ.பி.ஸி தமிழின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதன்படி யாழ்ப்பான நகரத்திலுள்ள அனைத்து முஸ்லிம் கடைகளும் பூட்டப்பட்டிருப்பதுடன் குறித்த கடைத் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் யாழ்ப்பான நகரத்திலுள்ள தமிழ் வர்த்தகர்களின் கடைகள் அனைத்தும் திறந்துள்ளதுடன் வழமையைப் போல அவர்களின் கடைகளில் வியாபார நடவடிக்கை இடம்பெற்று வருவதாக செய்தியாளர் மேலும் குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும் நகரத்திலுள்ள போக்குவரத்து மற்றும் அரச-தனியார் செயற்பாட்டு மையங்கள் அனைத்தும் வழமையைப்போல இயங்கிவருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + 12 =

*