;
Athirady Tamil News

வவுனியாவில் இயல்பு நிலை பாதிப்பு, இராணுவத்தினர் கடும் பாதுகாப்பு…!! (படங்கள்)

0

வவுனியா நகரப்பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்கள் கடைகளை மூடியுள்ளதாலும்,இராணுவத்தினரின் கடும் பாதுகாப்பு காரணமாகவும் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்ட்டுள்ளது.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் நடைபெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் முஸ்லிம் வர்த்தகர்களால் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் வவுனியா பள்ளிவாசல் சுற்றுவட்டத்தில் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் கடும் பாதுகாப்பை வழங்கி வருகிறார்கள்.

நேற்றையதினம் (08) வவுனியா வர்த்தசங்கத்திற்கு கடைகளை அடைத்து பூரண கர்த்தால் அனுஸ்டிக்க பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்த நிலையில் வர்த்தக சங்கம் கடையடைப்பை நிராகரித்திருந்த நிலையில் வவுனியா மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாண்டோ தலைமையில் வவுனியா நகரப் பள்ளி வாசலுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மாவட்ட உதவிபொலிஸ் அத்தியட்சகர் வவுனியா மாவட்டத்தை பொறுத்த வகையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் வவுனியாவிற்குள் உள்நுழைபவர்கள் மற்றும் வாகனங்கள் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அவசரகாலச்சட்ட அமுலில் உள்ள நிலையில் அசம்பாவிதங்களை ஏற்படுத்த முனைபவர்கள் உடனடியாக கைது செய்யப்ட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.

அந்தவகையில் வவுனியா நகரப்பகுதியில் ஒருசில கடைகள் திறந்திருந்த போதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

????????????????????????????????????

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 19 =

*