;
Athirady Tamil News

கண்டி,அம்பாறை வன்முறை;ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க கோரிக்கை…!!

0

அம்பாறை, கண்டி பகுதிகளில் அண்மைய நாட்களாக இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றிய அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், தேசிய கொள்கை திட்டமிடல் இராஜாங்க அமைச்சருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

இந்த வன்முறைகளுக்குப் பின்னால் தூண்டுதல்களை மேற்கொண்ட அத்தனை நபர்களையும் கைது செய்வதற்கான விசாரணையை ஜனாதிபதி ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை சமூக வலைத்தளங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையானது நாளை சனிக்கிழமை நீக்கப்படும் என்றும் அவர் சபையில் இன்று தெரிவித்தார்.

இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான பிரசாங்களை செய்து, எவரையும் தூண்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + 9 =

*