;
Athirady Tamil News

கண்டி வன்முறை; 12 பெட்ரோல் குண்டுகள் இன்று அதிகாலை கண்டுபிடிப்பு…!!

0

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து வழமைக்கு நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கின்ற நிலையில் இலுக்தென்ன பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 பெட்ரோல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த பெட்ரோல் குண்டுகளை பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.

நாசகார செயற்பாடுகளுக்கான இவை பதுக்கிவைக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும் இதுசம்பந்தமாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை கண்டி – பேராதனையிலுள்ள பிரகத்தி மாவத்தையிலும் நேற்று வியாழக்கிழமை மாலை 11 பெட்ரோல் குண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

எனினும் இந்த சம்பவத்திலும் எவரும் கைது செய்யப்படவில்லை.

எவ்வாறாயினும் கடந்த 4 தினங்களாக அடுத்தடுத்து விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு இரத்து செய்யப்பட்ட போதிலும், தொடர்ந்தும் அவசரகாலச் சட்டம் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் முப்படையினரும் கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 + fourteen =

*