;
Athirady Tamil News

தந்தையும் தாத்தாவும் இணைந்து சின்ன மகளுக்கு செய்த கொடூரம்…!!

0

இலங்கையின் தெற்கே காலி மாவட்டம் மீட்டியாகொட பகுதியில் 7 வயதான சிறுமி ஒருவரை அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சம்மந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் தாம் கைதுசெய்துள்ளதாக மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் தாய், செய்த முறைப்பாட்டையடுத்தே அவரது தந்தையையும், தாத்தாவையும் மீட்டியாகொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

சில மாதங்களுக்கு முன்னதாக கணவருடன் முறுகலை ஏற்படுத்திக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றதாக குறிப்பிட்ட சிறுமியின் தாய், வீட்டில் தனியாக இருந்த மகள், அங்கு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது பிள்ளையின் மகப்பேற்றுக்காக தாம், 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது மூத்த மகள் இவ்வாறு கடுமையான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர்களை, எதிர்வரும் 15ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு பலப்பிட்டி நீதவான் சம்பத் கமகே உத்தரவிட்டுள்ளார். கொடகம தெல்வத்த என்னும் முகவரியில் வதியும் 36 வயதான சிறுமியின் தந்தையும், 67 வயதான சிறுமியின் தாத்தாவுமே விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சிறுமி தொடர்பில் மருத்துவ அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சிறுமி பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மீடியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 5 =

*