;
Athirady Tamil News

கண்டி சம்பவத்தை இனவாதத்தை தூண்டும் நோக்கிற்காக பயன்படுத்திய ஒரு சிலர்…!!

0

கண்டி திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட சிறிய சம்பவத்தை ஒருசிலர் தமது தனிப்பட்ட மற்றும் இனவாதத்தை தூண்டும் நோக்கத்திற்காக பெரும் விருட்சமாக மாற்றிவிட்டதாக சட்டம்,ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் பெற்றதை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அனைத்து இன மக்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அறிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை அடுத்து அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தீர்மானித்தனர்.

இதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி, சட்டம்,ஒழுங்கு அமைச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தற்காலிகமாக ஒப்படைத்தார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சை யாருக்கு வழங்கலாம் என்ற இழுபறி நிலை ஏற்பட்ட நிலையில் அதனை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கும்படி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டது.

எனினும் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரான ரஞ்ஜித் மத்தும பண்டாரவை சட்டம், ஒழுங்கு அமைச்சராக நேற்று நியமித்தார்.

இந்த நிலையில் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார, கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × five =

*