;
Athirady Tamil News

அர்ஜுன் அலோசியஸின் மறு பரிசீலனை பிணைமனு மீண்டும் நிராகரிப்பு…!!

0

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பேர்ப்பச்சுவல் ஸ்டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவன நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரின் மறு பரிசீலனை பிணைமனு மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோருக்கான விளக்கமறியலை எதிர்வரும் 15 ஆம் திகதிவரை நீடித்து கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன உத்தரவிட்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணமுறி மோசடி விற்பனையில் 11,145 மில்லின் ரூபா அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் பேர்ப்பச்சுவல் ஸ்டசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவன நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கடந்த பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் தமக்கான பினைவழங்குமாறு கோரி இரண்டு மனுத் தாக்கல் செய்தும் அந்த மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 26 ஆம் திகதி பிணை மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த மனுவை நிராகரித்து கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

7 + eleven =

*