ஆப்கானிஸ்தான் ராணுவ முகாம் மீது தலிபான் தாக்குதல்- 10 போலீஸ்காரர்கள் பலி..!!

ஆப்கானிஸ்தானின் தக்கார் மாகாணத்தின் குவஜா கார் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று இரவு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.
முகாமில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உதவியாக கண்காணிப்பு பணியில் ஈடுபட சென்றபோது பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியதாக அம்மாகாண போலீஸ் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் யாரும் பலியாக வில்லை. இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
நேற்று முன்தினம் குனார் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த அமெரிக்கா, ஆளில்லா விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.