;
Athirady Tamil News

ஹெட்டியாவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்திற்கு பாதாள குழுவே காரணம்..!!

0

கொட்டாஞ்சேனை ஹெட்டியாவத்தை சந்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் நிழல் உலக குழுவினர் திட்டமிடப்பட்ட செயல் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல் துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்றிரவு உந்துருளியில் வருகை தந்தவர்கள் டீ 56 –ரக துப்பாக்கியால் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் அப்பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்கக்படப்டுள்ளனர்.

உயிரழந்தவர் காயமடைந்தவர்களின் எனவும் அவர்கள் புறக்கோட்டையில் பழங்கள் வர்த்தகம் செய்பவர் எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஹுனுபிட்டி பகுதியி;ல் அண்;மையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்திருந்தார்.

அவரும் புறக்கோட்டையில் பழ வர்தகம் மேற்கொண்டு வருபவராவார்.

ஹுனுபிட்டி சம்பவத்தில் காயமடைந்தவர் நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள நிழல் உலக குழுவொன்றின் தலைவராக கருதப்படும் வாழைத்தோட்டம் தினுக்க என்பவரின் உறவினர் ஆவார்.

இவ்வாறிருக்கு ஏதேனும் கப்பம் கேட்டிருக்கலாம் எனவும், அதனை வழங்காமையினால் அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம் காவல் துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × five =

*