;
Athirady Tamil News

ஐ.தே.க தலைமையகத்திற்கு முன்பாக ஆர்பாட்டம்…!!

0

அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆர்பாட்டம் இன்று முற்பகல் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவிற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் மாகாண பெயர் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்தே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொகுதி அமைப்பாளரே பெயர் பட்டியலுக்கு பெயரினை பரிந்துரைக்;க வேண்டும் எனவும், ஆனால் தொகுதி அமைப்பாளராக மலிக் சமரவிக்ரம அவ்வாறு பரிந்துரை செய்யவில்லை எனவும் ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த ஆர்பாட்டத்தின் காரணமாக நுகேகொடை முதல் பத்தரமுல்லை வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × one =

*