;
Athirady Tamil News

கண்டி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் நிலை…!!

0

கண்டியில் இடம்பெற்ற பதற்ற நிலை சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட 10 பேர் தீவிர விசாரணை பிரிவு முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் இன்று காலை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட குறித்த 10 பேரும் நேற்றிரவு கொழும்பிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

அவசரகால சட்டத்திற்கு அமைவாக அவர்களை தடுத்து வைத்து விசாணைக்குட்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மக்களின் குடியிருப்புக்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தளங்களுக்கு தாக்குதல் மேற்கொண்ட 71 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல் துறையினர் மேலும் தெரிவித்தனர்.

கண்டி நிர்வாக மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று மாலை அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலையில் நீக்கப்பட்டுள்ள பேரிலும் கண்டி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர், விசேட காவல் துறையினர், மற்றும் முப்படையினர் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் சேதமடைந்துள்ள வீடுகள் வர்த்த நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள், மற்றும் சொத்து இழப்பு தொடர்பில் தற்போது கணக்கிடப்பட்டு வருவதாக கண்டி மாவட்ட செயலாளர் ஏ ஏ பி ஹிட்டிசேகர தெரிவித்தார்.

“அதிரடி” இணையத்துக்காக.. தென்னிலங்கையில் இருந்து “கார்ல் மார்க்ஸ்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 9 =

*