;
Athirady Tamil News

தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்..!! (வீடியோ)

0

தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்
பதிவு: மார்ச் 09, 2018 11:40

மதுரை அருகே பள்ளி வளாகத்தில் சக மாணவர்கள் மோதிக் கொண்டதில் பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது. அரசு ஆஸ்பத்திரியில் மாணவர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேர்வு எழுத வந்த பிளஸ்-2 மாணவருக்கு கத்திக்குத்து – சக மாணவர்கள் வெறிச்செயல்
மேலூர்:

மதுரை அருகே உள்ள திருவாதவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது இந்த பள்ளியில் பிளஸ்-2 தேர்வுகள் நடந்து வருகின்றன.

இன்று வணிகவியல் தேர்வு நடைபெற்றது. இந்த பிரிவில் பயின்ற மாணவர் அர்ஜூன் (வயது 18) திருவாதவூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

அர்ஜூன் இன்று காலை பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சக மாணவர்களான கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகியோர் திடீரென அர்ஜூனிடம் தகராறு செய்தனர்.

எதிர்பாராத விதமாக கார்த்திக் ராஜாவும், சரவணக்குமாரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அர்ஜூனை சரமாரியாக குத்தினர். தடுக்க முயன்ற அர்ஜூனின் கைவிரல் துண்டானது.

மேலும் அர்ஜூனின் தலை, மணிக்கட்டு, தோள்பட்டை ஆகிய இடங்களில் வெட்டினர். அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்ததை பார்த்த கார்த்திக் ராஜா, சரவணக்குமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அர்ஜூனை ஆம்புலன்சு மூலம் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அர்ஜூன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிளஸ்-2 தேர்வு நடந்து வரும் நிலையில் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கத்தியால் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கத்திக்குத்து சம்பவத்திற்கு என்ன காரணம்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கத்தியால் குத்தப்பட்ட அர்ஜூனின் தந்தை பெயர் மாயக்காளை. தாயார் தீபா. இவர்கள் இலங்கை அகதிகள் முகாமில் தங்கி உள்ளனர்.

அர்ஜூன் தினமும் முகாமில் இருந்து பள்ளிக்கு வருவது வழக்கம். அது போல இன்றும் பள்ளிக்கு வந்துள்ளார். கத்தியால் குத்திவிட்டு தப்பிய மாணவர்கள் கார்த்திக் ராஜா, சரவணக்குமார் ஆகிய இருவரும் மேலூர் அருகே உள்ள சுண்ணாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

தலைமறைவான 2 பேரையும் மேலூர் போலீசார் தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − three =

*