;
Athirady Tamil News

யாழ்- கொக்குவில் சந்தியில் கடைமீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்…!! (படங்கள்)

0

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள கட்டட பொருட்கள் விற்பனை நிலையத்தில் சற்று முன் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இன்று (09-03-2018) மதியம் (சற்று முன்) அப்பகுதிக்கு வந்த இளைஞர் குழு அந்த விற்பனை நிலையத்தில் நின்ற இளைஞர்களை தாக்கி விட்டு அங்குள்ள பொருட்களை சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இதன்போது விற்பனை நிலையத்துக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள்களையும் அடித்து நொருக்கிவிட்டு சென்றுள்ளனர்.

இதில் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த தாக்குதலை மேற்கொண்ட இளைஞா்கள் தொடா்பில் பொலிஸாா் தீவிர தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனா்.

இதன்போது குறித்த தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னா் வேவுபாா்க்க வந்தவா் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞா் ஒருவா் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளாா்.மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 7 =

*