;
Athirady Tamil News

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் 9 பேர் பலி..!!

0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சுமார் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள ஷிட்டே பகுதியில் தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட அப்துல் அலி மசாரி என்னும் அரசியல் தலைவரின் 23-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதற்காக ஒரு பொதுகூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த கூட்டத்திற்குள் ஒரு பயங்கரவாதி நுழைய முயன்றுள்ளான். ஆனால் மக்கள் கூட்டத்திற்குள் நுழைய முடியாததால் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை கூட்டத்தில் வெளியில் வைத்தே வெடிக்க செய்தான். இதையடுத்து அப்பகுதியில் கூடி இருந்த மக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் காவலர் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், மேலும் 7 பேர் படுகாயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − five =

*