;
Athirady Tamil News

வவுனியா நெடுங்கேணியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைப்பு..!! (படங்கள்)

0

வவுனியா நெடுங்கேணியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெடுங்கேணி மக்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருந்த சிறுநீரக பிரச்சனையை கருத்திற்கொண்டு சுமார் பத்து இலட்சம் ரூபாவில் வவுனியா வடக்கு பிரதேச சபை மற்றும் ஜி.ரி.லிங்கநாதனின் வடமாகாண சபை குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இவ் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனால் இன்று திறந்து வைக்கப்பட்து.

இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச சபையின் செயலாளர் சத்தியசீலன், செட்டிக்குளம் பிரதேச சபை செயளாளர், வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தெரிவான இந்திரன் மற்றும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + 8 =

*