;
Athirady Tamil News

கிளிநொச்சியில் விசேட அதிரடிப்படையினரால் கஞ்சா பொதி மீட்பு..!! (படங்கள்)

0

விசேட அதிரடிப்படையினரால் இன்று கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய இன்று கிளிநொச்சியில் குறித்த கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளது.

155ம் கட்டை பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் செல்வது தொடர்பில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின்படி சோதனை மேற்கொண்டபோது குறித்த கஞ்சா பொதியும், கடத்தி சென்ற சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1.5 கிலோ எடையுடைய கஞ்சா பொதியே இவ்வாறு கைப்பெற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரையும், கஞ்சா பொதியையும் கிளிநொச்சி நீதிமன்றில் ஆயர்படுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + eleven =

*