;
Athirady Tamil News

மட்டக்களப்பில் வயற் பகுதியில் மீட்கப்பட்ட இரண்டு கைக்குண்டுகள்…!! (படங்கள்)

0

மட்டக்களப்பு சந்திவெளி வயற் பகுதியில் கைக்குண்டு இரண்டு வெள்ளிகிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி – திகிலிவட்டை துறை பகுதியை அண்மித்த பற்றைக்குள் கைக்குண்டு கிடப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலொன்றினையடுத்து இக்குண்டுகள் மீட்க்கப்படடுள்ளன.

குறித்த குண்டுகள் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் குணடுகளினைச் செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × five =

*