;
Athirady Tamil News

கண்டி வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 146 பேர் கைது…!!

0

கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில், இதுவரை 146 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்தில் 65 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன், இனங்களுக்கு இடையே முறுகலை ஏற்படுத்தும் வகையில், சமூகவலைத்தளங்கள் ஊடாக பிரசாரங்களை மேற்கொண்ட பாடசாலை மாணவர்கள் இருவர் குற்றபுலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்” என கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − fourteen =

*