;
Athirady Tamil News

உ.பி.யில் கந்துவட்டி கொடுமையில் கொளுத்தப்பட்ட பெண்..!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் ஜஜாவுலி கிராமத்தை சேர்ந்தவர் ரேஷ்மா தேவி(45). இவர், அதே பகுதியை சேர்ந்த பெரிய கந்துவட்டி குழுவிடம் 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப விழாவிற்காக 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக தெரிகிறது.

இவர் கடந்த மூன்று மாதமாக சரியாக வட்டி கொடுத்து வந்துள்ளார். மேலும் அசலையும் கொடுத்து முடித்துள்ளார். ஆனால் அந்த கந்துவட்டி கும்பல் மேலும் வட்டி கேட்டுள்ளனர். இதனால் ரேஷ்மாவுக்கு, அந்த கந்துவட்டி கும்பலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு ரேஷ்மாவின் வீட்டிற்குள் நுழைந்த சிலர், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதனால் அவர் வலியில் கதறியுள்ளார். உடனடியாக அக்கம்பக்கம் இருந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது ரேஷ்மா மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இவர் உடலில் 60 சதவிகிதம் காயங்கள் இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கந்துவட்டி கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர்.

கந்துவட்டி பிரச்சனையால் பெண் ஒருவர் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + five =

*