;
Athirady Tamil News

கண்டியில் மீண்டும் ஊரடங்கு சட்டம்…!!

0

வன்முறைகள் இடம்பெற்ற கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணியில் இருந்து நாளை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாநகர சபை பகுதியை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இவ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கண்டி, திகன நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே குறித்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

six − four =

*