;
Athirady Tamil News

தவறான நோயாளிக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் பணியிடைநீக்கம்..!! (வீடியோ)

0

கென்யாவில் தவறான நோயாளிக்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

கென்யாவிலுள்ள Kenyatta National Hospital என்னும் மருத்துவமனையில் ஒரு நோயாளியின் மூளையில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக நரம்பியல் வல்லுநர் ஒருவர் தலைமையிலான மருத்துவர்கள் ஆபரேஷன் ஒன்றை நிகழ்த்தினர்.

வெகுநேரம் தேடியும் கட்டியைக் காணவில்லை. பிறகுதான் தெரிந்தது அவர்கள் தவறான நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்கள் என்பது.

மருத்துவர்கள் அது தங்கள் தவறு இல்லையென்றும் நோயாளியை ஆபரேஷனுக்கு தயார் செய்த நர்ஸ்களின் தவறு என்றும் குற்றம் சாட்டினர். உடனடியாக அந்த நரம்பியல் வல்லுநர், உடன் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர் அனைவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மருத்துவமனை நிர்வாகம் நிகழ்ந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறது.

தவறான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நோயாளி உடல் நலம் முன்னேறி வருகிறார்.அறுவை சிகைச்சை செய்யப்பட வேண்டிய நோயாளியின் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் காண்ப்படுவதால் அவருக்கும் தற்போது அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படப் போவதில்லை.

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்குமுன் நோயாளியுடன் மருத்துவர்கள் எதுவுமே பேசுவதில்லை என்றும், நோயாளியின் சார்ட்டைப் பார்த்து அறுவை சிகிச்சையைத் தொடங்கி விடுவதாகவும் பரவலாக ஒரு குற்றச்சாட்டு காணப்படுகிறது.

இதுமட்டுமின்றி சில வாரங்களுக்குமுன் குழந்தை பெற்று களைத்துப் படுத்திருக்கும் பெண்களிடம் ஆண் பணியாளர்கள் பாலியல் அத்துமீறல்கள் புரிவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததும் சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிடதும் குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − eight =

*