;
Athirady Tamil News

ரஷ்யாவில் பனிக்கட்டியில் புதைந்திருந்த 54 வெட்டப்பட்ட கைகள்..!!

0

ரஷ்யாவின் சீனா எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் ஆமூர் ஆறு அமைந்துள்ளது. அங்கு நிலவிவரும் கடும் குளிர் காரணமாக அந்த ஆறு உறைந்து அதன் மீது பனிக்கட்டி படலங்கள் படர்ந்துள்ளன. அந்த பனிக்கட்டி படலத்தை கட்டுமான பணி ஒன்றிருக்காக நேற்று கொஞ்சம் கொஞ்சமாக வெட்டி எடுத்துள்ளார்கள்.

அப்போது அங்கு ஒரு பை கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த பையில் 54 வெட்டப்பட்ட கைகள் இருந்துள்ளது. அதாவது 27 ஜோடி கைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த 27 கைகளில் பல கைகளில் கைரேகை அழிக்கப்பட்டு இருக்கிறது. இப்போதுவரை ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த கைகள் யாருடையது, ஏன் வெட்டப்பட்டது என்று தெரியவில்லை. அதேபோல் இந்த கைகளை வெட்டியது யார் என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை. அது எந்த காலத்தில் வெட்டப்பட்டது என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் அவை வெட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

தற்போது அந்த கைகளை சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கையில் இருக்கும் ரேகையை வைத்து ஏதாவது கண்டுபிடிக்க முடியுமா என்று சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − two =

*