;
Athirady Tamil News

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் செல்கிறார்..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிற 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 6 நாட்கள் பயணமாக மொரிசியஸ், மடகஸ்கர் நாடுகளுக்கு செல்ல இருக்கிறார்.

புதுடெல்லியில் இருந்து 11-ம் தேதி புறப்பட்டு மொரிசியஸ் செல்லும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அங்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். 12-ம் தேதி மொரிசியஸ் நாட்டில் நடைபெறும் 50-வது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். அதன்பின் அந்நாட்டின் ஜனாதிபதி அமீனா குர்ஜிப்பையும், பிரதமர் பிரவிண்ட் குக்நாத்தையும் சந்தித்து பேசுகிறார்.

அதன்பின் 14-ம் தேதி மடகஸ்கர் நாட்டுக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த் அங்கு இரண்டு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். இதுவே மடகஸ்கர் நாட்டுக்கு ஒரு முக்கிய இந்திய தலைவரின் முதல் பயணமாகும். மடகஸ்கரில் அந்நாட்டின் ஜனாதிபதி ஹெரி ராஜோனரிமாம்பியானினாவை சந்தித்து பேசுகிறார். பின்னர் 15-ம் தேதி மடகஸ்கரில் இருந்து புறப்பட்டு இந்தியா திரும்புகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 1 =

*