;
Athirady Tamil News

முதல்முறையாக 12 கேமரா லென்ஸ்கள்..!!

0

ஷிப்ட்கேம் என்ற நிறுவனம் மொபைல்களில் இணைத்துக்கொள்ளும் வகையில் மொத்தமாக 12 லென்ஸ்களை கொண்ட புதிய கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளது.

ஸ்மார்ட் போன் பயனர்கள் புகைப்படம் எடுப்பதை வழக்கமாக்கிக்கொண்ட இந்த வேளையில், டிஜிட்டல் கேமராக்களைப் போல் துல்லியமான கேமராக்களை நாடும் ஸ்மார்ட் போன் பயனர்கள் அதிகரித்துவருகின்றனர். விலை உயர்ந்த மாடல்களில் மட்டுமே பெரும்பாலும் துல்லியமான கேமரா வசதிகள் வழங்கப்படுவதால் அதனை வாங்கவும் பயனர்கள் சற்றே தயக்கம் காட்டிவருகின்றனர்.

இதற்கு உதவும் வகையில் ஸ்மார்ட்போன்களில் இணைக்கும் லென்ஸ்களை ஷிபிட்கேம் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்தும் பயனர்கள் இந்த கேமராக்களை இணைத்துக்கொண்டு துல்லியமான புகைப்படங்களை எடுக்க இயலும். இதில் 180 டிகிரி பிஸ்-ஐ, 2X ஜூமிங் லென்ஸ், 120 டிகிரி wide angle, 10X மற்றும் 20X மேக்ரோ ஆகிய லென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனுடன் டிஜிட்டல் கேமரா போல் புகைப்படம் எடுக்க உதவும் தனித்துவமான லென்ஸ்களும் உடன் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஷிபிட்கேம் கருவியானது மிகவும் எளிதான முறையில் ஸ்மார்ட்போனின் பின்புறம் இணைத்துக் கொண்டுபயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பின்புற கேமராக்கள் மட்டுமின்றி செல்பி கேமராக்களுக்கும் லென்ஸ்கள் தனியே வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய லென்ஸ் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ஐபோன் பயனர்கள் மட்டும் பயன்படுத்தும் வகையில் வெளியாகி உள்ள இந்த ஷிபிட்கேம் விரைவில் பிற ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 + 15 =

*