;
Athirady Tamil News

அ.தி.மு.க. பெயரை தினகரன் பயன்படுத்த விடமாட்டோம் – அமைச்சர் ஜெயக்குமார்..!!

0

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தெளிவான முடிவு எடுத்து இருக்கிறார். அந்த முடிவை வலியுறுத்தி நம்முடைய உரிமையை நிலைநாட்டுவோம். 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீரை முறைப்படுத்தும் குழு அமைக்க வேண்டும் என்பது தான் நம்முடைய கோரிக்கை.

கர்நாடகா மாநிலம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. நமக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தெளிவாக இருக்கிறது. நம்முடைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். நாங்கள் அந்த அழுத்தத்தை தொடர்ந்து கொடுப்போம். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை.

அ.தி.மு.க.வின் பெயரை டி.டி.வி.தினகரன் உபயோகப் படுத்த நாங்கள் எந்தவகையிலும் விடமாட்டோம். அதற்கு உண்டான சட்ட நடவடிக்கையை நாங்கள் நிச்சயம் எடுப்போம். சுதந்திர நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அ.தி.மு.க. அம்மா என்ற பெயரை எல்லாம் வைக்க கூடாது. அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்.

நடிகர் கமல்ஹாசன் திருடர்கள், கயவர்கள், குற்றவாளிகளுடன் கூட்டணி கிடையாது என்று சொல்லி வருகிறார். அது அவருக்கு தான் பொருந்தும். அவருடன் கூட இருந்த நடிகை கவுதமியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். இதுவே சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 − four =

*