;
Athirady Tamil News

பரந்தன் முறிகண்டி சிற்றூர்திசேவை பணிபகிஸ்கரிப்பு…!! (படங்கள்)

0

கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி சிற்றூர்த்தி சேவைகள் இன்று(10) பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

நேற்றைய (09) தினம் பரந்தன் பகுதியில் சிற்றூர்த்தி நடத்துனர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தாக்கிய இளைஞர்களை பொலீஸாருக்கு சிற்றூர்த்தி உரிமையாளர்கள் அடையாளம் காட்டிய போதும் பொலீஸார் அவர்களை கைது செய்யாமையினை கண்டித்தும் தாக்குதலுக்கு எதிர்புத் தெரிவித்தும் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.

அத்தோடு சில நாட்களுக்கு முன்னரும் பரந்தன் முறிகண்டி சிற்றூர்த்தியில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டிருந்தது இது தொடர்பில் பொலீஸார் போதுமான நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் சிற்றூர்த்தி உரிமையாளர்கள் நடத்துனர்கள் தெரிவித்தனர்.

எனவே இவற்றை கண்டித்தே இன்றைய தினம் பணிபகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.இதன் போது சம்பவ இடத்தில் தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்களில் சிலா் நிற்பதனை அவதானித்த சிற்றூர்தி உரிமையாளர்கள் பொலீஸாருக்கு அடையாளம் காட்டியதனை தொடர்ந்து நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனனர்.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + two =

*