;
Athirady Tamil News

வவுனியா செட்டிகுளம் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!!

0

வவுனியா செட்டிகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவா் உயிரிழந்துள்ளாா்.

குறித்த விபத்தில் படுகாயம் அடைந்த வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது…..

நேற்று மாலை 4 மணியளவில் மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிச் சென்ற ஹயஸ் வானும், மெனிக்பாம் பகுதியிலிருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேராக செட்டிகுளம் கல்லாற்றுப்பாலத்தில் விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் 5 போ் படுகாயம் அடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையிலிருந்து சென்ற நோயாளா் காவு வண்டி அவர்களை ஏற்றிச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும் கல்லாறு வேப்பங்குளம் செட்டிகுளத்தைச் சேர்ந்த செல்வராசா நாகராசா வயது 33 என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்த ஏனையவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − eleven =

*